இளம்பருவப் பெண்களின் சினைப்பை நோய்க்குறி (PCOS)View in: English

PolyCystic Ovarian Syndrome(PCOS)

– Dr. வித்யா செல்வம், MBBS, MD, DNB, MRCOG(UK)

கோவிட் பெருந்தொற்றினால் மாறியுள்ள நம்‌ வாழ்க்கை முறை நம்மை பல தொற்றா நோய்களுக்கு உட்படுத்தியிருக்கிறது.  அவற்றுள் ஒன்று இளம் பருவப் பெண்கள் சந்திக்கும், சினைப்பை நோய்க்குறி(PCOS).  இந்த கட்டுரையில் நாம் இதைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

pcos

சினைப்பை நோய்க்குறியை எப்படி கண்டறிவது?

சீரற்ற மாதவிடாய் சுழற்சி, ஆண்கள் போல முகத்தில் முடி வளர்தல், அளவில் பெரியதாகவும் சுற்றி சிறு சிறு நீர்க்கட்டிகளுடனும் இருக்கும் சினைப்பை ஸ்கேன் மூலம் தெரிதல்.

இதனுடன் தொடர்புடைய மற்ற அறிகுறிகள் – அதிக அளவிலான ‌உடல் எடை மற்றும் கழுத்தின் தோல் தடிமனாகவும் கருமையாகவும் நிறம்‌மாறுதல்.

சினைப்பை நோய்க்குறி எதனால் ஏற்படுகிறது?

சீரான மாதவிடாய் உள்ள பெண்களுக்கு, முதல் பாதி நாட்களில் பெண்மைக்கான ஈஸ்டிரஜன் ஹார்மோன் இருக்கும்.  பருவமடைதல்(முதல் மாதவிடாய்) முதல் இறுதி மாதவிடாய் வரை ஈஸ்டிரஜனின் அளவு கூடியும் குறைந்தும் சீரான சுழற்சியில் இருக்கிறது.

 நம் உடலில் உள்ள கொழுப்பு செல்கள் கொழுப்பைக் சேர்த்து வைக்கும் பெதிமூட்டைகள் மட்டும் அல்ல..  அவை பல ஹார்மோன்களை சுரக்கும் சுரப்பிகள் ஆகும்.  அவற்றுள் ஒன்று எஸ்ட்ரோன், பெண்மைக்கான ஈஸ்டிரஜனின் பண்பைக் கொண்ட ஹார்மோன்.

அதனால், மாதவிடாயின் முதல் 15 நாட்கள் இருக்க வேண்டிய ஈஸ்டிரஜனின் விளைவுகள் மாதம் முழுவதும் தொடர்கிறது.  

உடல் பருமானாகும் போது ரத்தத்தில் அதிகரிக்கும் கொழுப்பு இன்சுலின் வேலை செய்வதைத் தடுக்கிறது.  இதை சமன் செய்ய கணையம் அதிக இன்சுலின் சுரக்கிறது.  அதிக அளவு இன்சுலின் அதிக அளவிலான ஆண்மைக்கான டெஸ்டோஸ்டிரோனை செயல்படக்கூடிய நிலையில் வைக்கிறது.

இந்த ஹார்மோன் மாற்றங்களால் சினைப்பை தனது சரியான சுழற்சியை இழக்கிறது.  தவறின் விகிதங்களில் ஹார்மோன்கள் இருப்பதால் சினைப்பைடில் கருமுட்டைகள் உருவாகி வெளிவருவதில்லை; இதனால் மாதவிடாய் சரியான நேரத்தில் வருவதில்லை. 

டெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதால், ஆண்மைக்கான முடி வளர்ச்சி அதிகரிக்கிறது.  இந்த அதிக வளர்ச்சி அடையும் சினைப்பைதான் மாதவிடாய் தவறுதல், ஆண்மைக்கான முடி வளர்ச்சி மற்றும் பெரியதாகவும் சுற்றி கட்டிகளுடனும் இருக்கும் சினைப்பை ஸ்கேன் மூலம் தெரிதல் ஆகியவற்றிற்கு வித்திடுகிறது..

செயல்படக்கூடிய டெஸ்ட்டோஸ்டெரோன் அதிகமாக இருப்பதால் ஆண்களைப்போல முடி வளர்தல் இருக்கும்.

முறையற்ற மாதவிடாய் சுழற்சி, அதிக அளவில் டெஸ்ட்டோஸ்டெரோன் இருப்பதற்கான அறிகுறிகள், ஸ்கேனில் சிறு சிறு நீர்க்கட்டிகளால் சூழப்பட்ட வீங்கிய சினைப்பைகள் இவையே PCOS என்ற நிலையின் முக்கியக் கூறுகளாகும்.‌

PCOS னால் ஏற்படும் நீண்டகாலப் பிரச்சனைகள் என்னென்ன?

  • மாதமாதம் சினைமுட்டையிலிருந்து கருமுட்டை உருவாகி வெளியேறாததால் பிற்காலத்தில் கருத்தரிப்பதில் தாமதம்‌ ஏற்படலாம். அதற்கான சிகிச்சை முறைகள் தேவைப்படலாம்.
  • இன்சுலினால் சரியாக வேலை செய்ய முடியாததால் பிற்காலத்தில் இப்பெண்களுக்கு சர்க்கரை நோய் வர வாய்ப்புள்ளது.
  • கர்ப்பப்பையின் உட்சுவரின் மீது எப்போதுமே ஈஸ்ட்ரோஜென் வேலை செய்வதால் பிற்காலத்தில் கர்ப்பப்பை புற்றுநோய் மற்றும் புற்று நோய்க்கான முந்தைய‌நிலை ஏற்பட வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

அதிகப்படியான கொழுப்புதான் எல்லா பிரச்சனைகளுக்கும் அடிப்படைக் காரணமா?

பெரும்பாலானவர்களுக்கு- ஆம்.

PCOS ற்கான சிகிச்சை முறைகள் என்ன?

அதிக அளவில் இருக்கும் கொழுப்பைக் குறைப்பதுதான் நிரந்தரத் தீர்வு. உடற்பயிற்சி செய்யுங்கள். நீங்கள்‌தற்போதிருக்கும் எடையிலிருந்து 5% சதவிகிதம் குறையுங்கள். அவ்வாறு குறைத்தால் மாதம் கருமுட்டை நல்ல முறையில் உருவாகி, அதற்கான நேரத்தில் வெளியேறி மாதவிடாய் சுழற்சி சரியான இடைவெளியில் நடக்க ஆரம்பிக்கும்.

ஆரோக்கியமான உணவு என்றால் என்ன?

  • அதிக நார்ச்சத்துள்ள உணவு
  • காய்கறிகள், கீரைகள்
  • சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை இல்லாத உணவு
  • பிராய்லர் கோழி மற்றும் அதன்‌முட்டையில்லாத உணவு
  • சிறிய அளவில் சரியான இடைவெளிய்ல் எடுக்கப்படும் உணவு.

எனக்கு உடல் எடை சரியான அளவில் உள்ளது. ஆனாலும் PCOS வருவதற்கு வாய்ப்பிருக்கிறதா?

ஆம். சில பெண்களுக்கு மரபணு காரணிகள் காரணமாக உடல் இயல்பாகவே இன்சுலின் ஹார்மோனிற்கு சரியாக வேலை செய்வதில்லை. அதனால் சரியான எடையில் இருந்தாலும் PCOS வருவதற்கு வாய்ப்புள்ளது.

எனக்கு சரியான நாள் இடைவெளியில் மாதவிடாய் வருகிறது. ஸ்கேனில் PCOS என்று வந்திருக்கிறது.  இதை எப்படி எடுத்துக் கொள்வது?

இல்லை. சரியான நாட்கள் இடைவெளியில் மாதவிடாய் வரும்பொழுது, முகத்தில், உடலில் அளவிற்கு மீறி முடி வளர்தல் போன்ற அதிகமான டெஸ்டோஸ்டிரோன் இருப்பதற்கான அறிகுறிகள் இல்லாத போது வெறும் ஸ்கேனில் PCOS என்று வருவதற்கு பயப்படத் தேவையில்லை.

Dr. வித்யா செல்வம், மகப்பேறு, பெண்கள் நலம், குழந்தையின்மை மற்றும் லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சை நிபுணர்.  இவர் குழந்தையின்மைக்கான ஆலோசனை மற்றும் சிகிச்சைகள், பிரசவத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய பரிசோதனைகள், சுக மற்றும் அறுவை சிகிச்சை பிரசவம், பெண்கள் நல சிகிச்சைகள், லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சைகள் மற்றும் பேறுகால ஸ்கேன் எடுப்பதில் தேர்ந்தவர்.  இவர் சென்னையில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக உள்ளார்.
PCOS  பற்றி உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், doctor@peribytes.com என்ற இணைய முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம் அல்லது கீழே கமெண்ட் செய்யவும்.  உங்கள் கேள்வியின் தன்மையை பொறுத்து உடனே அல்லது அடுத்த கட்டுரையில் பதிலளிக்கப்படும்.  உங்களது அடையாளத்தை வெளிப்படுத்தாமலும் கேள்விகள் கேட்கலாம்.  இந்த கட்டுரை ஒரு வழிகாட்டுதல் மட்டுமே, மருத்துவரை அணுகாமல் எந்த சிகிச்சை அல்லது மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டாம்.  அடுத்த பகுதியில் சந்திப்போம்!!!
Featured Deals
English
Peribytes
Logo
Compare items
  • Total (0)
Compare
0
error: